தோனியை நாங்கள் இந்திய அணிக்கு கொண்டு சேர்க்க கங்குலியுடன் பத்து நாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டோம்.? பல வருட ரகசியத்தை சொன்ன முன்னாள் வீரர்.

0

கிரிக்கெட்டை பொறுத்த வரை ஒரு முன்னணி வீரர் வெளியேறுவதற்கு முன்பாக அந்த இடத்திற்கே ஒரு பொருத்தமான வீரரை செலக்ட் செய்வது வழக்கம். அந்தவகையில் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பல ஆண்டுகளாக இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக வலம்வந்தார்.

அவருக்கு மாற்று வீரராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென இந்திய நிர்வாகம் முடிவெடுத்தது அப்போது இந்திய அணியில் தலைமை நிர்வாக பொறுப்பில் கிரண் மோரே இருந்தார் அப்போது தோனியை இந்திய அணியில் சேர்க்க கங்குலியுடன் பத்து நாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியது நாங்கள் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை தேடிக் கொண்டிருந்தோம். அந்த வீரர் 6 அல்லது 7 வது இடத்தில் இறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சொல்வதோடு அதிரடியும் காட்டக்கூடிய நபராக இருக்க வேண்டுமென பேசியதோ பொழுது எங்கள் கண்களில் பட தொடங்கியவர் தோனி என குறிப்பிட்டார்.

dhoni
dhoni

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில்  ஒரு அணி 170 ரன்கள் எடுக்க வேண்டும் அந்த போட்டியில் தோனி களம் இறங்கிய அவர் மட்டும் 130 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை தீர்மானித்தது. அது எங்களைப் பெரிதும் கவர்ந்தது இதுபோன்ற ஒரு வீரர் தான்இந்திய அணிக்கு தற்போது தேவைப்படுகிறார் என்று நாங்கள் சரியாக புரிந்து கொண்டோம்.

ganguly
ganguly

அதன் பிறகு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தோனி இருக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் கங்குலி முதலில் அதை மறுத்து விட்டார். காரணம் அப்பொழுது இந்திய அணியில் தீப் தாஸ் குப்தா என்ற வீரர் விக்கெட் கீப்பராக இருந்தார். நாங்கள் கங்குலியை சமாதானப் படுத்தினோம் அதற்கு எங்களுக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டது.

பிறகு தோனி இந்திய அணியில் சேர்க்கப்பட்ட அவர் வந்த பிறகு இந்திய அணி பல மாற்றங்களை சந்தித்து. வெற்றி மேல் வெற்றியை  குவிக்க தொடங்கியது அதன்பிறகு அனைத்தும் அறிந்த செய்திதான் என குறிப்பிட்டார்.