நாங்க தான் உங்களை ஜெயிக்க வச்சிட்டோம்ல வலிமை பட அப்டேட்டை வெளியிடுங்கள் என வானத்தியிடம் அடம்பிடிக்கும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் பவர் தல அஜித். இவர் நடிப்பில் தொடர்ந்து பல திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.இத்திரைப்படத்தில் பிறகு ஒரு வருட காலங்களாக அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் மிகவும் பெரும் சோகமாக இருந்து வந்தார்கள். இந்நிலையில் தான் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக அஜித் வலிமை திரைப்படத்தில் போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது.

அதன் பிறகு எந்தப் அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீமா குரோஷி நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அதோடு வலிமை திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் ஒருநாள் திடீரென்று மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறினார்கள். ஆனால் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே அமைந்தது. அதன்பிறகு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர்களும் அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என்று எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றவர் வான்மதி.  இந்தத் தொகுதியில் நடிகர் கமலஹாசன் மற்றும் வான்மதி இருவரும் போட்டி போட்டுக் கொண்டார்கள். அதில் கடைசி வரையிலும் போராடி வான்மதி 1400 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் ஆவார்.

இந்நிலையில் ரசிகர்கள் வலிமை அப்டேட்டுகாக போராடி வந்ததை அறிந்த வான்மதி ரசிகர்களிடம் நான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக வலிமை அப்டேட் தருவேன் என்று  கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் உங்களை ஜெயிக்க வச்சிட்டோ வலிமை அப்டேட்  கொடுங்க என்று  வான்மதியிடம்  அடம் பிடித்து வருகிறார்கள்.