அப்பா இறந்தப்ப ஒரு சொட்டு கண்ணீர் வரல.. ஆடையை தானம் பண்ண போறோம் – மாரிமுத்துவின் மகள் எமோஷனல் பேட்டி

Marimuthu
Marimuthu

Marimuthu Daughter : எதிர்நீச்சல் சீரியலில் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மாரிமுத்து.  இவர் வெள்ளித்திரையில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார் இப்படிப்பட்ட மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இவருடைய இறப்புக்கு பிறகு மாரிமுத்துவின் குடும்பம் எப்படி உள்ளது என்பது குறித்து அவருடைய மகளிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு ஒவ்வொன்றாக பதில் அளித்துள்ளார்.. அப்பா எங்கள் விஷயத்தில் ரொம்ப தலையிட மாட்டார் எங்கள் மீது தவறு இருந்தால் கூட எங்களுடன் தான் என்ன நடந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பார் எந்த வேலையாக இருந்தாலும் நாம செய்ய வேண்டும் என்று கூறுவார்.

கார் துடைப்பதை கூட அவர் தான் எனக்கு கற்றுத் தந்தார் அப்பாவோட இறுதி சடங்கு முடிந்து கார் பயங்கர அழுக்கா இருந்தது அதை துடைக்கும் போது தான் அந்த இடத்தில் அழுக்கு இருக்கு, இந்த இடத்தில் அழுக்கு இருக்கும் என்று அவர் கூறியது ஞாபகத்திற்கு வந்தது அவர் சொன்ன இடத்தில் அழுக்கு இருந்தது. அவருடைய அறை அப்படியே தான் இருக்கு அவருடைய பரிசுகள் எல்லாத்தையும் அவருடைய அறையில் வைத்து விட்டோம்..

அவருடைய ஆடைகள் இருக்கிறது 30 நாள் கழித்து ஏதாவது ஆசிரமத்திற்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறோம் எல்லோரும் சொல்வது ஒரு நாளாவது அந்த வீட்டில் அப்பா இருந்திருக்கலாம் என்று தான் சொல்கிறார்கள் அதன்பின் அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் அவருடைய மன கஷ்டத்தை நம்மிடம் சொல்லுகிறார்கள் நமக்கு அதை கேட்பதில் கஷ்டம் இருந்தாலும் அதை கேட்க வேண்டிய கடமை இருக்கிறது.

அப்போவோட இறுதி சடங்கு முடிந்து இரண்டு நாள் இருக்கும் அப்பா மொபைலுக்கு ஒரு போன் வந்தது அண்ணா தான் எடுத்தான் ஒரு 15 வயது  பெண் பேசினார் நிறைய தைரியம் கொடுத்து பேசிய அந்த பெண் சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்தார் யாருன்னு தெரியல ஒருவர் போன் செய்து சாப்பிட்டீர்களா என்று கேட்கிறாரே என நினைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான் அப்பா எவ்வளவு பேர் சம்பாதித்து வைத்து சென்று இருக்கிறார்.

அப்பா இறந்து விட்டார் என்று தெரிந்து மருத்துவமனைக்கு போய் பார்த்ததுமே என்ன பண்றது என்றே தெரியவில்லை அழுகை வரவில்லை ஏனென்று தெரியவில்லை அதற்கு பிறகு பிரேக்கிங் பாயிண்ட் இருந்தது என்ன பண்றது என்று தோன்றியது.  அதற்கு பிறகு தோன்றியது அம்மாவை பாக்கணும், அண்ணாவை பார்த்துக்கணும் என்று தான் தோன்றியது.

அவன் ரொம்ப எமோஷனல் நாங்க உடைந்து அழுவதை அப்பா விரும்ப மாட்டார் அதனால் எந்த நிலையிலும் அழக்கூடாது என்று தோன்றியது.  இவ்வளவு தன வாழ்க்கை சரி ஓகே அப்படி போக வேண்டியது தான் உடைந்து உட்கார்ந்தால் பேரே இல்லாமல் போய்விடும் மாரிமுத்து பொண்ணு, பையன் அப்படிங்கிற மாதிரி விஷயம் பண்ணனும் என்று பேட்டியில் மாரிமுத்துவின் மகள் கூறியுள்ளார்.