உன் படத்தை காசு கொடுத்து வாங்குவது வேஸ்ட் – தனுஷ் முகத்தை பார்க்க யாரும் வர மாட்டாங்க.? கிழித்தெடுத்த சினிமா பிரபலம்.

dhanush-
dhanush-

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, அஜித் போன்ற நடிகர்களும் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களாக மாறவில்லை. பல கேலி கிண்டல்கள் எதிர்மறை விமர்சனங்கள் போன்றவற்றை அனைத்தையும் கடந்து வந்ததால் மட்டுமே தற்போது சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர்.

அந்த வகையில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை மக்களுக்கு பல திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் அனைத்தும் வெற்றி அடைந்ததா என்றால் கேள்விக்குறிதான் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியையும் சந்திக்கும் அதனை நாம் கடந்து அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்தால் தான் நாம் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க முடியும்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் ஜகமே தந்திரம் மாறன் போன்ற படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தன. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் விநியோகஸ்தர்கள் பலர் இந்த படம் ஓடாது என்ற எண்ணத்தில் சிலர் வாங்கி சென்றனர். மேலும் சில ஏரியாவில் இந்த படத்தை வாங்கவே இல்லையாம் அதனால் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா பல விநியோகஸ்தர்களை அழைத்து படத்தை போட்டு காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு விநியோகஸ்தர்கள் ஒன்றும் சொல்லாமலே சென்று உள்ளனர்.

அதனால் பின்பு கஸ்தூரிராஜா அவர்களுக்கு போன் செய்து கேட்கும்போது உங்கள் பையன் உங்களுக்கு வேண்டுமென்றால் பார்க்க அழகாக தெரியலாம் காசு கொடுத்து படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் இந்த முகத்தை எல்லாம் எப்படி பார்ப்பார்கள் என கூறி போனை வைத்துள்ளார்களாம்.பின்பு ஒரு சில ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்தை வாங்க அதே வினியோகஸ்தர்கள் எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள் என போட்டி போட்டு என்னிடம் கேட்டுள்ளனர். இதனை கஸ்தூரிராஜா அண்மையில் ஒரு மேடையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.