சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, ஆர்யா – சாயிஷா போன்ற பல ஜோடிகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம் ஏன் இந்த வருடம் கூட விக்னேஷ் சிவன் – நயன்தாரா, ஆதி – நிக்கி கல்யாணி, கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் போன்றவர்கள் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜோடிகளை போலவே ஜெய் மற்றும் அஞ்சலி இணைவர்ர்கள் என சொல்லப்பட்டது. இருவரும் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற இரு படங்களில் இணைந்து நடித்தனர் அப்போது இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது வந்த தகவல் என்னவென்றால் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகை அஞ்சலி Fall என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது அதில் அஞ்சலியும் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக உங்களுக்கு ஜெய்யுடன் ஏற்பட்ட காதலால் தான் சினிமா வாழ்க்கையே வீணானதா என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அஞ்சலி, நான் ஜெய்யை காதலிக்கிறேன் என எப்பொழுது சொன்னேன் எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதனால் என்னை பற்றி எழுதுபவர்கள் யாருடன் சேர்த்து எழுத வேண்டும் என அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதுமில்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை அதனால் இதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என தெளிவாக பேசி உள்ளார்.