அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? ஏன் நடிக்கவில்லை தெரியுமா.?

0

படத்தின் கதை களம் சிறப்பாக இருந்தால் போதும் அதை பிரம்மாண்டமான தொழில்நுட்பத்தில் எடுத்து அதை மக்களுக்கு மேலும் ரசிக்கும் வகையில்  எச்டி தரத்திலும்  உருவாக்குவது இயக்குனர் ஷங்கருக்கு கைவந்த கலை.

அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படு வருவதோடுமட்டுமல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய ஒரு லாபத்தை எட்டுகின்றன. அதுபோன்ற ஒரு படம் தான் அந்நியன்.

இந்த படம் சங்கருக்கு எப்படி ஒரு பிரம்மாண்ட படமான அதுபோல நடிகர் விக்ரமுக்கும் இந்த திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய தனது கேரியரில் ஒரு பேஸ்ட் படமாக மாற்றிக் கொண்டார்.

இந்த படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த படத்தில் சதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் போன்ற பலரின் நடிப்பு உச்சத்தில் இருந்தது அதிலும் குறிப்பாக விக்ரம் மாறுபட்ட தனது திறமையை வெளிக்காட்டி இந்த படத்திற்கு உயிரூட்டினார் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு அபாரமாக இருந்தது மேலும் இந்த சதாவின் நடிப்பு ஓரளவு மக்கள் மத்தியில் பேச பட்டது ஆனால் இந்த படத்திற்காக முதன் முதலில் நடிக்க தேர்வானவர் என்னவோ பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.

அப்போதைய காலகட்டத்தில் அவரது கால்ஷீட் சரியான முறையில் கிடைக்காததால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது  பிறகு இந்த படத்தில் கமிட்டானார் நடிகை சதா.