ராமராஜன் நடித்த “கரகாட்டக்காரன்” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா.? இவரு நடிச்சிருந்தா படம் ப்ளாக் தான்..

90 கால கட்டங்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன். இவர் அந்த சமயத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுக்கு பயத்தை காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோவாகவும் ராமராஜன் விளங்கினார்.

மேலும் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான்.  அந்த வகையில் ராமராஜன்  நடித்த படங்கள் ஆனா எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊரு விட்டு ஊரு வந்து, வில்லுப்பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற படங்கள் வெற்றி படங்கள் தான்.

இந்த படங்களை விட நடிகர் ராமராஜனுக்கு குறிப்பாக கரகாட்டக்காரன் படம் தான் அவரது கேரியரில்  பெஸ்ட் படம். 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் படம் வெளியானது. இந்த படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார் ராமராஜன் உடன் கைகோர்த்து செந்தில், கவுண்டமணி, கோவை சரளா, காந்திமதி, கனகா, சந்தான பாரதி, சண்முகசுந்தரம் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு ராமராஜன் சரி, கனகாவுக்கும் சரி ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் உண்மையில் கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர் என சொல்லப்படுகிறது.

karakattakaran

இயக்குனர் கங்கை அமரன் முதலில் இந்த கதையை மைக் மோகன் இடம் கூறியுள்ளார் ஆனால் கரகாட்டத்தை தலையில் தூக்கி வைத்து ஆடினால் நன்றாக இருக்காது என கூறி அவர் இந்த கதையை நழுவ விட பின் ராமராஜனுக்கு சென்றதாக கூறப்படுகிறது ராமராஜன் சிறப்பாக நடித்து வெற்றியை ருசித்தாராம்.

Leave a Comment

Exit mobile version