விடிவி கணேஷ் கதாபாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல காமெடி நடிகரா.? இவர் மட்டும் நடித்திருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் தான்.!

தமிழ் சினிமாவில் காதல் கதைகளை கொண்டு எடுத்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தோல்வி அடைவதில்லை அதற்கு முக்கிய காரணம் காதல் கதைகளை வைத்து எடுத்தால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அந்த வகையில் பார்த்தால் காதல் திரைப்படமாக வெளிவந்த பல திரைப்படங்கள் பல கோடி வரை வசூல் செய்து மிகப் பிரம்மாண்டமான சாதனையை படைத்துள்ளது.

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த திரைப்படம் வெளியானபோது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக பாராட்டப்பட்டார் அதையும் தாண்டி விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது.சிம்புவிற்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை த்ரிஷாவும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல வகையான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

பொதுவாகவே ஒரு திரைப்படம் என்றால் அந்த திரைப்படத்தில் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்க்காக ஒரு காமெடி நடிகரும் இருப்பார் அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்புவிற்கு திரைப்படம் முழுவதும் துணையாக இருந்து மக்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகர்தான் விடிவி கணேஷ் இவர் அடிக்கடி இந்த திரைப்படத்தில் இங்க என்ன சொல்லுது என வரும் வசனத்தையே பேசி வருவார் அந்த வகையிலேயே இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க வேண்டும் என்று தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது விடிவி கணேஷ் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் தான் முதலில் நடிக்க இருந்ததாம்.

vivek
vivek

ஒரு சில காரணங்கள் குறித்து அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது அதன் பின்பு தான் கணேஷ் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டியதா என்று ஆச்சரியமாக இந்த தகவலை ஆராய்ந்து பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment