“துப்பாக்கி” திரைப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகையா.? ஏன் நடிக்கல தெரியுமா.! தீயாய் பரவும் செய்தி.

சினிமா உலகில் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர்கள் ஒரு படத்தில் களம் இறங்கும் போது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொடும் அந்த வகையில் முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்சும், தளபதி விஜய்யும் இணைந்து 2012ஆம் ஆண்டு பணியாற்றிய திரைப்படம் தான் துப்பாக்கி.

இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் படம் வசூலில் 100 கோடிக்கு மேல் சாதனை செய்து அசத்தியது. துப்பாக்கி படம் நடிகர் விஜய் மற்றும் ஏ. ஆர்.முருகதாஸ் கேரியரில் ஒரு பேஸ்ட் படமாக அமைந்தது.

இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிகை காஜல் அகர்வால், வித்யூத் ஜாவல், சத்யன், மனோபாலா, மலையாள ஜெயராம் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள்  நடித்திருந்தனர். இந்த படத்தில் எப்படி விஜய்க்கு நல்ல கேரக்டராக அதுபோல நடிகை காஜல் அகர்வாலுக்கும் இந்த படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தந்தது.

ஆனால் முதன் முதலில் துப்பாக்கி திரைப்படத்தில் காஜல்அகர்வால் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் என்னமோ பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தானாம். ஆனால் அப்போது அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த காரணத்தினால் கால்ஷீட் கிடைக்காமல் போனது.

அதற்கு பிறகு தான் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தனராம். இச்செய்தி தற்போது சமூக வலைதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment