விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் சிம்ரனுக்கு பதிலாக இந்த நடிகை தான் நடனமாட இருந்தாரா.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.!

0

இளைய தளபதி விஜய் மிக பிரம்மாண்டமாக தனது 65வது திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைய தளபதி விஜய் இந்தத் திரைப்படத்திற்கு முன்பு நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையாக கிளம்பி விட்டது.

விஜய் நடித்த பழைய திரைப்படங்களை பற்றிதான் சமீபகாலமாகவே பல தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் விஜய் திரைப்படங்களில் நடிப்பதை விட தனது நடனத்தில் நன்றாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்வார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.அந்த வகையில் பார்த்தால் விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் அவரும் சிம்ரனும் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு முறையாக நடனமாடி இருப்பார்கள்.

இந்நிலையில் அந்த பாடலில் சிம்ரனுக்கு பதிலாக முதலில் வேறு ஒரு நடிகை தான் நடிக்க இருந்தாராம் ஆம் அந்த நடிகை யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை காயத்ரி ரகுராம் தான் இவர்தான் சிம்ரனுக்கு பதிலாக முதலில் அந்த திரைப்படத்தில் நடனமாட இருந்தாராம்.

youth
youth

ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்து அசத்தியுள்ளார்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி இருக்கிறது.