நடிகர் விக்ரமின் ஆரம்ப கால வாழ்க்கை இவ்வளவு சோகமானதா.? நமக்கு தெரியாத விஷயங்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் இவர்  நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பெரிய அளவில் வெறியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க இருக்கிறோம்…

1. நடிகர் விக்ரமின் நிஜ பெயர் கென்னடி ஜான் விக்டர் 1966 ஆம் ஆண்டு பிறந்தார் இவருக்கு 56 வயது ஆகிறது. 2. விக்ரமின் அப்பா சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தான் தீவிரமாக முயற்சித்தார் ஆனால் அவரால் சின்ன ரோலில் மட்டுமே நடிக்க முடிந்தது அதனாலயே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது விக்ரமின் கனவாக இருந்ததாம்.

3. சிறு வயதிலிருந்து டாக்டராக வேண்டுமென்றால் ஆசை இருந்தது ஆனால் பிளஸ் டூ மார்க் குறைந்ததால் மெடிக்கல் சீட்டு கிடைக்கவில்லை அதனால் டென்டல் முயற்சித்தாலும் கிடைக்கவில்லை அதன் பின் வேறு வழி இல்லாமல் சென்னை லயோலா காலேஜ்ஜில் ஆங்கில literature படிக்க தொடங்கினார்.

4. 1980 ஆம் ஆண்டு விக்ரமுக்கு கால் உடைந்த நிலையில் மூன்று வருடங்கள் படுத்த படுக்கையாக அப்பொழுது  அவரை சைலஜா என்ற பெண் சந்தித்துள்ளார் அவருடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார். 5. விக்ரமின் மனைவி சைலஜா சென்னையில் தற்போது பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக இருந்து வருகிறார்.

6. சினிமா உலகில் எடுத்த உடனேயே நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் சேது படம் தான் அவருக்கு முதல் பிரேக் கிடைத்தது என சொல்லப்படுகிறது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Leave a Comment