மகாபாரதத்தில் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்தது ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகரா.?

mahaparatham
mahaparatham

தொடர்ந்து விஜய் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.மேலும் அந்த வகையில் மகாபாரதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இவ்வாறு மகாபாரதம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை இதற்கு பல கோடி செலவு செய்தார்கள்.

இவ்வாறு இது போன்றவற்றை எளிதில் மறந்துவிட முடியாது. பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையேயான நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த தொடர் பல ஹிந்தி ஹீரோக்கள் ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இதன் மூலம் பலரும் தங்கள் வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தார்கள்.

அந்த வகையில் சின்ன திரையில் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தொடர் என்ற பெயரையும் மகாபாரதம் பெற்றது. இந்தத் தொடரில் ஆரம்பிக்கும் பொழுது முடியும் பொழுதும் கிருஷ்ணரின் கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்கும் ஏனென்றால் இவர் அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் கொடுப்பார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரம்மியமான இவ்வாறு காவிய குரலில் கிருஷ்ணர் கவிதை வாசிப்பார் அந்த குரலை கேட்கும் போது சில சமயங்கள் நம்மை மறக்க நேரிடும். மேலும் இவருடைய இனிமையான கவிதை காவியம் குழந்தைகள், பெரியவர்கள்,இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்தது. இதற்கு முக்கியமான காரணம் அந்த குரல் தமிழில் கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் தான்.

actor
actor

அது வேறு யாருமில்லை ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் மற்றும் ஜீவாவுக்கு அப்பாவாக நடித்த வரும் நடிகர் தசரதி இது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவர் நடிகர் மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞரும் என்பது குறிப்பிடத்தக்கது.