ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்த நடிகருடன் திருமணம் நடைபெற இருந்ததா.? யார் அந்த நடிகர் தெரியுமா.?

0

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் கன்னடத்தில் நிறைய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னடத்தில் ஆரம்பித்து தெலுங்கு சினிமாவில் நுழைந்து தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக விளங்கி வருகிறார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டு பின்பு தமிழில் இவர் கால் பதித்தார்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்த சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் இவருக்கு திருமணம் நடக்க இருந்தது ரக்ஷித் ஷெட்டி கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் என்பது நமக்கு தெரிந்தது தான் நிச்சயதார்த்தம் வரை நடைபெற்ற பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.

rashmika8
rashmika8

அதுமட்டுமல்லாமல் இவர்களது நிச்சயதார்த்தம் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு என பல கேள்விகளை இவரிடம் எழுப்பி வருகிறார்கள்.

rashmika7
rashmika7

ஒரு சில ரசிகர்கள் நீங்கள் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை அதற்காக நீங்கள் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடிங்கள் என கேட்டு வருகிறார்கள்.