பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செய்தாரா.. நாக சைதன்யா.? அவரே கூறிய பதில்.

0
naga-chaitanya-
naga-chaitanya-

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா இவர் சினிமா உலகில் பல வெற்றிகளை கொடுத்து ஓடுக்கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையான சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் கழித்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

அதன் பிறகும் இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் இது இப்படி இருக்க மறுபக்கம் ரசிகர்கள் சமந்தாவும் நாக சைதன்யாவும் நல்ல ஜோடிதான அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர் ஆனால் இருவருமே மீண்டும் சேர்வதற்கான சாத்தியம் இல்லாதது போல் தான் இருந்து வருகின்றனர்.

பேட்டி என்று வந்துவிட்டால் இருவரும் மாத்தி மாத்தி எதையாவது சொல்லி விடுகிறார்கள் இதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நாக சைதன்யாவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக பொன்னியின் செல்வன் நடிகை உடன் டேட்டிங் செய்தீர்களா என கேட்டுள்ளனர்.

மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராஜ், விக்ரம் பிரபு, பிரபு, விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது இதுவரை படத்திலிருந்து பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்து ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள சோபிதா உடன் நீங்கள் டேட்டிங் செய்தீர்களா என நாக சைதன்யாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் அளித்தது எனக்கு சிரிக்க தான் தோணுகிறது என கூறி முடித்தார். பெரியளவு  ரியாக்ஷன் கொடுக்கவில்லை அது நல்லதாகவும் போய்விட்டது. எதையாவது சொல்லி இருந்தால் அது ஒரு மிகப்பெரிய விஷயமாக மாறி இருக்கும் எனவும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.