வெற்றிமாறனின் “விடுதலை” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? நல்லவவேலை எஸ்கேப் ஆயிட்டாரு…

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் எடுத்து வரும் திரைப்படம் விடுதலை.. இந்தப் படம்  மலைவாசி மக்கள் எப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. விடுதலை படமும் மிகப்பெரிய படம் என்பதால் அதை இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டு உள்ளாராம் அண்மையில் தான் இந்த படத்தின் சூட்டிங் முடிந்தது.

இந்த படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார் வாத்தியார் கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காடு, மலை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்ட வந்தன. இந்த படத்தில்நடிக்க விஜய் சேதுபதிக்கு எட்டு நாட்கள் மட்டுமே தேவைப்படும் எனவெற்றி மாறன் முதலில் கூறினார்.

உடனே விஜய் சேதுபதி ஓகே சொல்லி கால்ஷீட் கொடுத்துள்ளார் ஆனால் 45 நாட்கள் வரை அவரை வைத்து படம் எடுக்கப்பட்டதாக இப்போ வெற்றிமாறன் கூறி உள்ளார்.  ஒருவழியாக விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் முதலில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது  பாரதிராஜாவை தான்.. கதையை சொல்லிக் கால் ஷீட் எல்லாம் வெற்றிமாறன் வாங்கியுள்ளார் ஆனால் படத்தில் இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது நடித்தால் நீங்கள் தான் சிரமப்படுவீர்கள் என்று அவரிடம் சொல்லி உள்ளார் வெற்றிமாறன். பிறகு அவரது அனுமதி பெற்ற பின்னர்..

பாரதிராஜா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ததாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.  முன்னதாக பாரதிராஜாவிற்கு  தலை முடியை வெட்டி டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்தாராம்.  அதனால்தான் வெற்றிமாறன் இந்த விஷயத்தை கூறிய போது முதலில் பாரதிராஜா திட்டிவிட்டு பிறகு வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு சம்மதித்துள்ளார்

Leave a Comment