என்னுடைய படத்தில் ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்பு வேண்டுமா.? இந்த தகுதி வேண்டும் – கட்டளையிடும் RJ பாலாஜி.!

திறமை இருப்பவர்கள் சினிமா உலகில் புதுப்புது அவதாரங்கள் எடுக்கின்றனர். அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக தொடங்கிய தன் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி ஒருகட்டத்தில் சினிமா உலகில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து பாலாஜி மூக்குத்தி அம்மன் என்ற திரைப் படத்தை இயக்கியும் நடித்தும் அசத்தினார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்தார் இந்த படம் அப்போது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார்.

வருகின்ற ஜூன் 17ஆம் தேதி ஆர்ஜே பாலாஜி நடிப்பில் “வீட்டுல விசேஷங்க” என்னும் படம் வெளியாக இருக்கிறது இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா தாஸ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது வீட்டுல விசேஷங்க படம் முழுக்க முழுக்க ஒரு தமிழ் படமாக இருக்கும் எந்த மொழியிலும் டப்பிங் செய்யப்பட மாட்டாது என கூறினார் மேலும் தனது படங்களில் நடிக்கும் நடிகைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.

அதில் ஆர்ஜே பாலாஜி சொன்னது எனது படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு முதலில் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் தமிழ் நன்றாக பேச தெரியனும் அப்போதுதான் அந்த படம் தமிழ் மக்களை நல்லபடியாக சென்றடையும் அதனால்தான் என் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு இப்படி ஒரு தேர்வு செய்கிறேன் என கூறினார்.

Leave a Comment