ஜியோ வந்ததிலிருந்து மற்ற நெட்வொர்க் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அதுவும் வோடபோன் கடன் நெருக்கடியால் தற்போது சிக்கித் தவிக்கிறது, இந்தநிலையில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தன்னுடைய மொபைல் சர்வீஸ் ரேட் அனைத்தையும் அதிரடியாக உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் எந்த அளவுக்கு உயரப் போகிறது என்பது மட்டும் இன்னும் அதிகாரபூர்வமாக அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை, நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரண்டாவது மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
வரி தொடர்பான வழக்கில் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்தவேண்டிய நிலுவை வோடபோன் நிறுவனம் செலுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது இதனால் வோடபோன் நிறுவனம் ஏறக்குறைய 50 ஆயிரத்து 921 கோடி இழப்பீடு சந்தித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடர வேண்டுமென்றால் அரசிடம் இருந்து ஏதாவது சலுகையும் நீதிமன்றத்திடம் இருந்து ஏதாவது சாதகமான உத்தரவை எதிர்பார்த்து உள்ளது.
இந்தநிலையில் வோடஃபோன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியும் இழப்பையும் பண நெருக்கடியையும் வாடிக்கையாளர்கள் மேல் சுமத்த வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதில் அதிலிருந்து மீள்வதற்காக மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து மொபைல் சர்வீஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது, வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் டிஜிட்டல் ரீதியான சேவை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.