தொகுப்பாளரும், டான் பட நடிகருமான மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.! வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படங்கள்..

தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பல வருடங்களாக விஜேவாக பணியாற்றி வரும் vj விஜயின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகான் இருக்கிறாரா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். அதாவது தமிழ் சினிமாவிற்கு ஆர்.ஜேவாக அறிமுகமாகி தற்பொழுது நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருபவர் தான் விஜய்.

இவர் ரேடியோ மிர்ச்சி எஃப் எம் சேனலில் ஆர்.ஜேவாக பணியாற்றி தன்னுடைய குரல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் பிறகு தொலைக்காட்சிகளிலும் இவருக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பிறகு இவருடைய ஆங்கரிங் ஸ்டைல் பலரையும் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார் மேலும் சமீபத்தில் RRR படத்தின் தமிழ் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் மிர்ச்சி விஜய் தனுஷ் நடிப்பில் வெளிவந்த விஐபி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

இவர் பேட்டி ஒன்றில் அவங்க எனக்கு ஒரு நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானாங்க அதுக்கப்புறம் பிரண்டா பேசிகிட்டு இருந்தோம் நல்ல நண்பராக எங்களுடைய பயணம் தொடங்கச்சி இரண்டு வருஷமா காதலிக்கிறோம் இப்போ காதல் கல்யாணத்தை எட்டி இருக்கிறது என்றார்.

vj vijay
vj vijay

இவ்வாறு இவருடைய திருமணத்திற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது தனது குழந்தைக்கு விஜே விஜய் நவீலன் என பெயர் வைத்துள்ளார்கள் இந்நிலையில் விஜய் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைவுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் கமெண்ட்களும் லைக்குகளும் குவிந்து வருகிறது.

Leave a Comment