இந்த விஷயத்தில் அர்ச்சனாவை ஓவர்டேக் செய்த சாரா.! 13 வயதில் இது கொஞ்சம் ஓவர் தான்

வெள்ளித்திரையில் தான் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது என்று பார்த்தால் தற்பொழுது சின்னத்திரையிலும் தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதை தொடங்கிவிட்டார்கள். இதற்காக சில நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அந்தவகையில் ஒன்று தான் சூப்பர் மாம் இந்நிகழ்ச்சியின் மூலம் பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது குழந்தைகளையும் அறிமுகமாகி பிரபலமடைந்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா.  இவர் சின்ன குழந்தையாக இருந்தாலும் தனது அம்மாவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு பேச்சுத் திறமை உடையவர். அந்த வகையில் தனது 13 வயதிலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் சென்றதிலிருந்து பல கேள்விகளுக்கு சாராவும் பதிலளித்து வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரையும் ரசிகர்கள் கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை வெறுப்பேற்றியும் வருகிறார்கள். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென இருந்த மொத்த இமேஜையும் டேமேஜ் செய்து கொண்டார் அர்சனா.

இதன் மூலம் பலரும் இவரை பற்றி தவறாக தற்பொழுது வரையிலும் விமர்சித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா சும்மா இல்லாமல் தனது மகளுடன் தங்களது வீட்டில் பாத்ரூம் எப்படி இருக்கும் என்பதை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் இவரை  திட்டி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சாராவும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.  அந்த வகையில் கேள்விகளின் சொன்ன நேரத்தில்,  ஓவரா சீன் போடுறாங்களே, ஆட்டிட்யூட் சரியில்லை என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள்.

sara

அதற்கு பதிலளித்த சாரா இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது டேக் கேர் என பதிலளித்துள்ளார் மற்றும் என்னால முடியலை விட்ருங்க ஸார் என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு தனது 13 வயதிலேயே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதால் அனைவரும் தனது அம்மாவையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல இந்த விஷயத்தில் என்று கூறி வருகிறார்கள்.

rara

Leave a Comment

Exit mobile version