கணவன் அடித்து துன்புறுத்திய கொடுமை பக்காவாக ஐடியா கொடுத்த ரம்யா.!

vj ramya 2
vj ramya 2

பிரபல விஜய் டிவியின் மூலம் பல தொகுப்பாளர்கள் அறிமுகமாகிய பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்த வகையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தான் விஜே ரம்யா இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கிராமத்து பெண்ணாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரும் மற்ற  நடிகைகளைப் போல தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என பலவற்றையும் செய்து வருகிறார்.  அதுவும் தற்பொழுது லாக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரம்யா முழுநேரமும் சோசியல் மீடிவே கதி என்று கிடக்கிறார்.

vj ramya
vj ramya

அந்தவகையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தொடர்ந்து தைரியமாக பல பதில்களை கூறி வருகிறார். தற்பொழுது கொரோனாவால் வீட்டிலேயே இருப்பதால் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்க முடியவில்லை அதோடு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் மிகவும் கடினமாக உள்ளது என்று ரம்யா கூற ரசிகர்களிடம் நீங்கள் எப்படி ஊரடங்கில் பொழுதைக் கழிக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.

vj ramya 1
vj ramya 1

இதற்கு பல ரசிகர்கள் வித்தியாசமான பல பதில்களை அளித்து வந்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் திருமணமான ஒரு பெண் வீட்டிலேயே இருப்பதால் என் கணவர் என்னை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வருகிறார் என்று கூறிவுள்ளார்.

இதற்கு விஜய் ரம்யா நீங்கள் பாதுகாப்பாக உங்கள் குடும்பத்துடன் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் நான் உங்களுக்காக வருத்தப்படுகிறேன் என்றும் கூறி உள்ளார். மனதில் தோன்றியதை மற்றவர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவியுங்கள் என்று அந்த பெண்ணிற்கு அட்வைஸ் செய்துள்ளார்