மீண்டும் ஒரு நாள் நாம் சந்திப்போம்.! கண்ணீருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த vj ரம்யா.!

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பளினிக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது, அந்த வகையில் வீஜே ரம்யாவுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள், சின்னத்திரை நிகழ்ச்சி மட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்குவார்.

ரம்யா தற்பொழுது விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார், மேலும் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது செல்ல நாய் இன்று காலை இறந்து விட்டது அதை நினைத்து தற்பொழுது அவர் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது நாடே தற்பொழுது கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது, அதேபோல் என் மயிலோ உடல்நிலை சரியில்லாமல் கடந்த பல வாரங்களாக போராடியது, பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது, ஆனால் இன்று காலை இறந்து விட்டது. அவனுக்கு உடல் நிலை சரி இல்லாததை பார்த்து நான் மன அழுத்தத்தில் இருந்தேன், தற்பொழுது எனக்குள் ஒரு பாதியை இழந்து விட்டதாக உணருகிறேன்.

எனக்கு அதிக அன்பு கொடுத்த மைலோ இன்று இல்லை. இதை என்னால் கொஞ்சம் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை மனிதர்கள் யாரும் கொடுக்காத அளவிற்கு மகிழ்ச்சியை எனக்கு நீ தந்தாய், அதேபோல் என்னை பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டாய். நான் உயிருடன் இருக்கும் வரை உன்னையே நினைத்துக் கொண்டிருப்பேன்.

ஒருநாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் என ரம்யா சுப்பிரமணியன் தனது பதிவில் கூறியுள்ளார். இது ரம்யா சுப்பிரமணியம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் பல ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

vj ramya
vj ramya
vj ramya
vj ramya
vj ramya
vj ramya

Leave a Comment