ஹீரோயின்னாக நடிக்கும் vj ரம்யா.! ரசிகர்களின் மனதை கவர்ந்த படத்தின் “டீசர்”.

விஜய் டிவி தொலைக்காட்சி திறமை உள்ள பல நபர்களை வெள்ளித்திரை அனுப்பி வைத்து உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே அதற்கு காரணம் விஜய் டிவி எப்பொழுதும் ஒரே நிகழ்ச்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்அது வெற்றிகரமாக ஓடி விட்டால் அது சீசன் செய்ததாக நடைபெறுவது வழக்கம்.

அப்படி இல்லை என்றால் அதனை உடனே நீக்கி விட்டு அடுத்து ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இதற்காக பல விதமான தொகுப்பாளர்களை கையில் வைத்து இருக்கிறது அந்த வகையில் டிடி, பாவனா, பிரியங்கா மற்றும் ரம்யா ஆகியோரும் இதில் வலம் வந்தனர்.

அதிலும் குறிப்பாக தொகுப்பாளர்களில் லிஸ்டில் முதன்மையானவராக இருப்பவர்கள் டிடி அதன் பிறகு ரம்யா தான் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகின்றனர்.

அதிலும் ரம்யா டிவி நிகழ்ச்சியை பெருமாளும் தொகுத்து வழங்காவிட்டாலும் சினிமா அவார்டு மற்றும்  முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

சின்னத்திரையில் தொகுப்பாளர் பணியை செவ்வனே செய்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் அவ்வப்போது படவாய்ப்புகளும் வந்தது அந்த வகையில் 2007ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான “மொழி” படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக நடித்து அசத்தினார்.

அதில் இவர் நடிப்பு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பல இயக்குனர்கள் இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நிறைய வாய்ப்பை கொடுக்க தொடங்கினார். அந்த வகையில் காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, சங்கத்தமிழன் ,மாஸ்டர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

இந்த நிலையில் நடிகை ரம்யா திடீரென ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். “நெஞ்சோடு கலந்திடு” என்ற சீரிஸ்ஸில்  நடித்துள்ளார்  இந்த படத்தின் டீசர் தற்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் லைக்குகளை அள்ளிய வருகிறது. இந்த சீரிஸ் நிச்சயம் ரம்யாவின் வழக்கை பயணத்தை மாற்றி நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர் பார்க்கபடுகிறது. இதில் அவரது நடிப்பு வைத்துப் பார்க்கும்போது நீங்க சூப்பராக வருவீர்கள் என்பது தெரியவருகிறது.

Leave a Comment

Exit mobile version