தமிழே தெரியாது ஆனால் விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் ஆங்கர் இவர்தான்.! எல்லாத்துக்கும் காரணம் மா. கா. பா தான்..

0

தமிழ் தெரியாமல் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது சிறந்த தொகுப்பாளராக தமிழில் பின்னி பெடல் எடுத்து வரும் தொகுப்பாளினி தான் பிரியங்கா. பிரியங்காவிற்கு தமிழ் தெரியாதா என்பதை கேட்டால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் இவருக்கு உண்மையிலும் தமிழ் தெரியாது என்பது தான் உண்மை.

இவரின் சொந்த ஊர் மகாராஷ்டிரா தான்.  அந்த வகையில் இவரின் அம்மா அப்பாவுடன் மகாராஷ்டிராவில் வாழ்ந்து வந்துள்ளார்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பிழைப்புக்காக கர்நாடகாவில் வசிக்க தொடங்கியுள்ளார்கள்.  அதோட கர்நாடகாவில் தான் பிரியங்கா தனது பள்ளிப் படிப்பையும் முடித்தார். இப்படிப்பட்ட நிலையில் பிரியங்காவின் 14 வயதில் இவரின் தந்தை காலமானார்.

இந்நிலையில் பிரியங்காவின் அப்பா இறப்பிற்குப் பிறகு பிரியங்கா மற்றும் அவரின் அம்மா குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்கள். சிவில் இன்ஜினியரிங் முடித்த பிரியங்காவின் அம்மா வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பிரியங்காவும் கல்லூரி முடித்துவிட்டு  விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றுவது தான் இவரின் கனவாம்.

அதன்பிறகு பிரியங்கா ஏபிஎல் புரமோட்டராக பணிபுரிய ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது இதனைத் தொடர்ந்து சுட்டி டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தார்.

vj priyanga 1
vj priyanga 1

அதன் பிறகு இவரின் கனத்த குரல் மற்றும் இவர் தமிழ் பேசுவது போன்றவற்றை பார்த்து பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி கலக்கி வருகிறார் தற்பொழுது இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.