அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மணிமேகலையை பங்கமாக கலாய்த்த மணிமேகலையின் கணவர் உசைன்.! வைரலாகும் புகைப்படம்.

0

தனது பேச்சுத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதன்மூலம் தொடர்ந்து இவருக்கு பல தொலைக்காட்சிகளிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணத்தை மணிமேகலையின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இதுவரையிலும் இவர்கள் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு உசைன் மற்றும் மணிமேகலை இருவரும் ஒன்றாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் இவர்களின் உண்மையான வாழ்க்கையில் நடந்த பல தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

இதனாலேயே இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருப்பதால் உசைன் மற்றும் மணிமேகலை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களை நாள்தோறும் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மணிமேகலை அழகி போட்டி ஒன்றில் கலந்துகொண்ட பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள்.

 அதற்கு மணிமேகலையின் கணவர் உசைன் ப்பா,  யாருடா இந்த பொண்ணு இவ்வளவு மேக்கப் போட்டு இருக்கு என்று கலாய்த்து உள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

manimekalai
manimekalai