11 வருடத்திற்கு முன்பு அழகிப் போட்டியில் பட்டத்தை தட்டிச் சென்றுள்ள VJ மணிமேகலை.! பல வருடம் கழித்து வைரலாகும் புகைப்படம்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளும் தொகுப்பாளினிகலுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் தொகுப்பாளினிகளும் சமூக வலை தளத்தை பயன்படுத்தி தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே மணிமேகலை இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே காத்து கிடந்தது அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அந்த அளவு தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவார்.

இந்த நிலையில் மணிமேகலை உசேன் என்பவரை காதலித்து வந்தார் ஆனால் இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் மணிமேகலை சிறிதுகாலம் சின்னத்திரைக்கு ஓய்வு கொடுத்து விட்டார்.

manimegalai
manimegalai

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் மீண்டும் மணிமேகலை வந்துவிட்டதால் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர் தற்பொழுது இரண்டாவது சீசன் முடிவடைந்த நிலையில். மணிமேகலையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டி ஒன்றில் மணிமேகலை கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது சிறந்த முடிக்கான விருதையும் தட்டிச் சென்றுள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் மணிமேகலை சின்ன பெண் போல் செம க்யூட்டாக இருக்கிறார்.

manimegalai
manimegalai

Leave a Comment