Vj Maheshwari vikram movie :சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் வெள்ளி திரையில் எப்படியாவது கால் தடம் பதித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் அந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் கால் தடம் பதித்துள்ளவர் தான் விஜே மகேஸ்வரி.
இவர் சின்னத்திரையில் காமெடி கில்லாடி, இசை அருவி, தாயுமானவன், புதிய கவிதை, அதிர்ஷ்ட லட்சுமி என பல சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2010 ஆம் ஆண்டு குயில் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் மந்திரப்புன்னகை, சென்னை 600028, பி ஆர் பிரேமா காதல், ரைட்டர், டான் போன்ற படங்களில் நடித்து வந்த மகேஸ்வரி விக்ரம் படத்தில் நடித்தார். இருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு பெரிய அளவு காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு விக்ரம் பட வாய்ப்பு கிடைத்தது.
எப்படி என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த விஜே மகேஸ்வரி ஒருநாள் திடீரென ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனத்திலிருந்து போன் பேசுகிறோம். நீங்கள் நடிகர் விஜய் சேதுபதியை ஜோடியாக அவருடைய மூன்றாவது மனைவியாக நடிக்க வேண்டும் என கேட்டார்கள் இதை கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை என்ன யாரோ கலாய்க்கிறார்கள் என்றுதான் நான் முதலில் யோசித்தேன்.
ஆனால் அவர்கள் பேசியது மிகவும் ப்ரொபஷனல் ஆக இருந்ததால் சரிங்க நான் பண்றேன்னு என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன் அதன் பிறகு என்னுடைய அம்மாவிடம் கூட என்னை யாரும் கலாய்க்கிறார்கள் போல தெரிகிறது என பேசிக்கொண்டு இருந்தேன் அதன் பிறகு அடுத்த நாளும் தொலைபேசி அழைப்பு வந்தது.
இதுபோல நீங்கள் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கிறீர்கள் எனவே நடிகை மைனா, ஷிவானி நாராயணன் ஒரு ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நீங்கள் நடிக்க எங்களுக்கு சம்மதமா என கேட்டார்கள்.

எனக்கு மூன்றாவது மனைவி இல்ல பத்தாவது மனைவியாக இருந்தாலும் சரி என்று நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறினேன். அதன் பிறகு அந்த பட வாய்ப்பு கிடைத்தது பட வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட நான் சொல்லவேயில்லை ஏனென்றால் படத்தின் நீளம் கருதி, என்னுடைய காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
பல முன்னணி நடிகைகளுக்கு இது நடந்திருக்கிறது நாமெல்லாம் எம்மாத்திரம் நாம் விளம்பரம் செய்துவிட்டு கடைசியாக படத்தில் காட்சிகள் இல்லை என்றால் அவமானம் ஆகிவிடும் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தமாகியும் யாரிடமும் நான் சொல்லவே இல்லை என்னுடைய பல காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது என்றும் கூறியிருக்கிறார் நடிகை விஜே மகேஸ்வரி.