Vj மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா.! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே.

நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை சீரியல் நடிகைகளும் தொகுப்பாளினிகளும் பெற்று வருகிறார்கள். அதேபோல் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் தொகுப்பாளர்களில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் மகேஸ்வரி. இவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.

ஆனால் முதன்முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் தான்.  அந்த நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கியது பல ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இசையருவி தொலைக்காட்சியிலும் இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருமணதிற்கு பிறகு சிறிது காலம் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் ஒரு  குழந்தைக்கு தாயானார் அதன் பிறகு மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.

vj maheshwari
vj maheshwari

இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் குயில்,  மந்திரப்புன்னகை, சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.  ஒரு குழந்தைக்கு தாயான மகேஸ்வரி தற்போது தனது தாய் வீட்டில் தான் வசித்து வருகிறார்.  மேலும்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தனது மகனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ரசிகர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.

vj maheshwari
vj maheshwari

Leave a Comment