பிரபல அரசியல் கச்சிக்கு சமூகவளைதலத்தின் மூலம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் VJ மகேஸ்வரி.!

தற்பொழுது தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் விஷயம் சட்டமன்ற தேர்தல்.அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து கட்சிகளில் உள்ள தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் மிகவும் முக்கிய இரண்டு கட்சிகள் தான் ஜெ.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இவர்கள் இருவரின் கட்சி. இவர்கள் இருவரும் இறந்த பிறகு தற்போது தான் தமிழகத்தின் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாண்புமிகு  ஜெயலலிதா அவர்களின் கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. அந்தவகையில் பாஜக 20 இடங்களில் போட்டி போடுகிறது. இதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது.

இந்த சட்டமன்றத் தேர்தல் மிகவும் கடுமையாக உள்ளதால் தீவிர பிரச்சாரத்தில் அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக தேர்தல் என்றாலே சினிமாவில் உள்ள பல பிரபலங்களை தங்களது கட்சியில் பிரச்சாரம் செய்ய சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் குஷ்பூ, கலா மாஸ்டர் என்று பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதோடு நடிகர் கமலஹாசன் அவர்களும் டார்ச் லைட் சின்னத்திற்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சின்னத்திரை நடிகை ஒருவர் ரசிகர்கள்களிடம் இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்க என்று ட்விட் போட்டுள்ளார்.

பொதுவாக சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் என்றாலே எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில் பிரபலம் அடைந்தவர் தான் vj மகேஸ்வரி. இவர் சன் டிவி தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவரின் சிறந்த பேச்சுத் திறமையினால் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் சன் டிவியின் மூலம் இவர் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனதால் இவர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே சமீபத்தில் சோஷியல் மீடியாவில் DMK-வுக்கு வாக்களியுங்கள் என்று கூறி ட்விட் ஒன்றய் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலர் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version