அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா தொகுப்பாளராக அறிமுகமானவரா.! எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.?

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும், கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து இயக்குவதால் இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த நாடகமாக திகழ்கிறது.

இவர்களை தொடர்ந்து முல்லை மற்றும் கதிர்  இவர்களின் ஒன் ஸ்கிரின் லவ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமீபத்தில் கொரோனாவின் இரண்டாவுது அலை அதிகமாக இருந்ததால் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒரு வாரம் ஒளிபரப்பானது. இந்நிலையில் இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் கடைசி தம்பி தான் கண்ணன்.

எனவே தற்போது இவருக்கு ஜோடியாக தீபிகா என்ற ஐஸ்வர்யா சமீபத்தில் அறிமுகமாகி உள்ளார். அந்தவகையில் தற்போது இவர்களின் காதல் காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இவர்களின் ஜோடியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தீபிகா இந்த சீரியலின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார் ஆனால் இவர் இதற்கு முன்பே விஜே-வாக பணியாற்றியவர் ஆவார்.

ஆம், தீபிகா திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆவார். கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாம் ஆனால் இவர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மிகவும் தப்பாகப் பேசுவார்கள் இதற்காக இவரின் அப்பா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கூறினாராம்.

deepilka
deepilka

அதன்பிறகு தீபிகா எப்படியாவது தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சென்னையில் படிப்பதற்காக வந்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பைத் தேடி வந்த இவருக்கு பிரபல கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகு தனது திறமையை வளர்த்துக்கொண்டு சீரியல்களிலும், திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.