மறைந்த சித்ராவின் கடைசி வீடியோ இதுதான்.! 2.3 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. கண்கலங்கும் ரசிகர்கள்.

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் சித்தா சமூக வலைதளத்திலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்,  சித்ரா என்று கூறினால் பலருக்கு தெரியாது ஆனால் முல்லை என்றால் பலருக்கும் தெரியும். இந்த நிலையில் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய கணவர் இருக்கும்பொழுது தற்கொலை செய்து கொண்டார்,  அவர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தார்கள் போலீசார்கள்,  விசாரணையில் சித்ரா தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் மற்றும் சித்ராவின் அம்மா என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார் அவருடன் போலீசார் கடுமையாக விசாரணை நடத்தி வந்தார்கள்,  ஆனால் இன்னும் சித்ராவின் தர்கொலைக்கு யார் தான் காரணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சித்ராவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதை ரசிகர்கள் பலரும் சேர் செய்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சித்ரா நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.  அப்படி இருக்கும் வகையில் சித்ரா நடித்த இருசக்கர வாகன விளம்பர வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.