மாடர்ன் உடையில் ரொமான்டிக்காக தேவதை போல் தனது வருங்கால கனவுருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சித்து!! வைரலாகும் புகைப்படம்.

0

vj chitra posted her fiance photo: வி ஜே சித்ரா இவர் முதன் முதலில் மக்கள் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலில் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் மாடலிங், டான்ஸ் ஷோ என அனைத்திலும் திறமை வாய்ந்தவர்.

அதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வி ஜே சித்ரா. இந்த சீரியலில் பல ஜோடிகள் நடித்து வந்தாலும் கதிர், முல்லை  கதாபாத்திரம்தான் ரசிகர்கள் பெருமளவில்  ஈர்க்கப்படுகிறது.

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதுபோலவே சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் சமூகவலைத்தளத்தில் சித்ரா விற்கென ஒரு ஆர்மியே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமத் ரவி என்பவருடன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் நிச்சயம் நடந்தது. இது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்க இருக்கும் திருமணம் ஆகும்.

வி ஜே சித்ரா நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் முதன்முதலாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

chithuvj
chithuvj