பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் நடனம் மற்றும் குறும்புத்தனமாக கலாய்க்கும் வீடியோ!! வைரலாகி வருகிறது.

0

VJ Chitra dance and fun video: VJ சித்ரா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து. அதன்பிறகு டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டார். இவர் செல்லமாக சித்து என்று அனைவராலும் அழைக்கப்படுவார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலை இவரை பார்ப்பதற்காகவே பலர் பார்க்கின்றனர். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது ரசிகர்கள் இவருக்கு அடிக்கடி ஏதேனும் கிப்ட் அனுப்பிவைத்து இவரை சந்தோச படுத்துவார்கள் அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவிப்பார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன்மூலம் வெள்ளிதிரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகை VJ சித்ரா அவர்கள் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் இவர் தற்போது ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்திலிருந்து வாடா வாடா பையா என்ற பாடலுக்கு இரண்டு ஆண்களுடன் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.