தமிழன் தான் கெத்து எனக் கூறி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய VJ பாவனா.!

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் நீண்ட காலமாக தொகுப்பாளினி வேலையை செய்து வருபவர் விஜே பாவனா. இவர் நீண்ட காலமாக தனது தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

தொகுப்பாளினி மட்டுமல்லாமல் கிரிக்கெட் கமெண்டர், சிங்கர், டான்ஸர் என பல திறமைகளை தனக்குள் வைத்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் முதன்முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அதன்பிறகு ஸ்டார் விஜய் யில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் 2017 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கேஜ் ஐபிஎல் போட்டியிலும், புரோ கபடி லீக் ஏஜ் போட்டியையும் கமாண்டராக பணியாற்றினார். இப்படி மிகவும் பிசியாக இருந்து வரும் பாவனா  சமூக வலைதளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் நடிகைகளைப் போல் புகைப் படத்தை வெளியிடுவது வீடியோவை வெளியிடுவது என வழக்கமாக வைத்துள்ளார் அதிலும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது ஐபிஎல் போட்டி தொடங்கிவிட்டதால் vj பாவனா வெறித்தனம் வீடியோ பாடலுக்கு நடனம் ஆடி உங்களுக்குப் பிடித்த நடிகரை நீங்களும் இதுபோல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக் கூறலாம் என அந்தப் பதிவில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment