விஜய் டிவியா? ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த vj பாவனா.!

0

vj bhavana answer to her fan which one she likes vijay tv or star sports viral:விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவோ, சீரியல் நடிகையாவோ,  நடிகராகவோ, கலக்கப்போவது யாரு, எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவர்கள் கண்டிப்பாக பிரபலமாகி விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பலபேர் விஜய் டிவியிலிருந்து தான் வெள்ளித்திரைக்கு நடிகராகவும்,  தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்,  பாடகராகவும், காமெடியனாகவும் போன்ற ஏதாவது உயர்ந்த இடத்திற்கு சென்று உள்ளனர். இந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பாவனா பாலகிருஷ்ணனும் ஒருவர்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்,  ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைதொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் மிர்ச்சி விஜயுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் தொகுப்பாளினி பாவனாவும்  ஒருவர். அப்படியிருக்கும்போது ரசிகர் ஒருவர் பாவனாவிடம் உங்களுக்கு விஜய் டிவி பிடிக்குமா?, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாவனா விஜய் டிவி தான் எனக்கு பிரபலத்தை பெற்றுத்தந்தது. ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் எனக்கு ஒரு குடும்பத்தையே கொடுத்தது. அதனால் எனக்கு ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் வாங்கிய சம்பளத்தை விட ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழில் பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்குகிறாராம். அதனாலேயே இவருக்கு ஸ்டார்ஸ்போர்ட்ஸ் பிடிக்குமோ என கூறுகின்றனர். என்னவோ வளர்த்து விட்டவங்கள மறக்காம இருந்தா சரி என ரசிகர்கள் கூறுகின்றனர்.