விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் பிரபல காமெடி நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஒருவர் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சமீப காலங்களாக பாக்கியலட்சுமி தொடர் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி யிலும் முன்னணி வகித்து வருகிறது.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் பழனிசாமி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவர் என்ட்ரி கொடுத்ததில் இருந்து சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்தது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாக்யா எப்படியாவது 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டை வாங்கி விடுவதாக சவால் விட்டிருக்கும் நிலையில் அதை வைத்து கதையை உருட்டி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாக்கியா பாண்டிச்சேரிக்கு பழனிசாமி எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம் என்பதால் மூன்று நாளைக்கு மூன்று வேளையும் சமைப்பதற்காக சென்றிருக்கும் நிலையில் அதே திருமணத்திற்கு ராதிகா, கோபி இருவரும் சென்று இருக்கிறார்கள்.
எனவே இதனால் திருமணத்தில் என்ன நடக்க போகிறது என்பதை வைத்து ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருபவர் தான் தாடி பாலாஜி. இவர் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவி நித்யாவுடன் பங்கு பெற்றார் அங்கும் இவர்களுக்கிடையே சண்டை போக பிறகு இதனை கமல்ஹாசன் அவர்கள் தீர்த்து வைத்தார்கள். எனவே இந்நிகழ்ச்சியிருக்கு பிறகு இவர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தாடி பாலாஜியின் மீது அவருடைய மனைவி புகார் கொடுத்திருந்தார்.
இவ்வாறு இதனால் தாடி பாலாஜிக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் களம் இறங்கி இருக்கிறார். எனவே இனிமேல் பாக்கியலட்சுமி தொடர் காமெடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பழனிச்சாமி மற்றும் தாடி பாலாஜி இருவரும் இணைந்து கோபியை பற்றி செய்ய இருக்கிறார்கள்.