விவாகரத்து முடிவை எடுத்த vj அர்ச்சனா.! கடைசியில் சாரா செய்த செயல்..

தொடர்ந்து பல வருடங்களாக ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் விஜே அர்ச்சனா தானும் தனது கணவரும் விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்ததாக கூறிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சினை ஏற்படுத்தி உள்ளது. ஜீ தமிழில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா சின்னத்திரையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு சின்னத்திரையில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த அர்ச்சனா பிறகும் மீண்டும் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை மேற்கொண்டார். இவ்வாறு ஜீ தமிழில் பணியாற்றி வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 4வது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல விமர்சனங்களை சந்தித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அன்பு தான் ஜெயிக்கும் என சொல்லி ரியோ, அறந்தாங்கி நிஷா ஆகியோர்களுடன் சேர்ந்து விளையாடி வந்த அர்ச்சனா நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே எதற்கு பிறகும் பல விமர்சனங்களை சந்தித்த இவர் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கும் நிலையில் தனது மகளுடன் இணைந்து பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மேலும் ஜீ தமிழில் நிகழ்ச்சிகளையும் இருவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபல மகளிர் கல்லூரி ஒன்றியிருக்கு சென்ற இவர் அங்கு தனக்கும் தன் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த வருவதால் கடந்த மாதம் நாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என பேசிக்கொண்டதாகவும் பிறகு தனது மகள் சாரா தான் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்தியதாகவும் அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு இருக்கிறார்கள் 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தார்களோ அதே போல் தற்பொழுதும் காதலித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அர்ச்சனா.

Leave a Comment