தொகுப்பாளினி அம்முவா இப்படி கும்முன்னு இருப்பது.! செம மாடர்ன் உடையில் அட்டகாசம் செய்கிறாரே.!

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் எவ்வாறு இருக்கிறார்களோ, அதே போல் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  அந்த வகையில் பல தொகுப்பாளர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சில தொகுப்பாளினிகள் ரசிகர்களின் கிரஷ் என்றே கூறலாம்.

அப்படி இருக்கும் வகையில் தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருந்து வந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால்தடம் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். மேலும் தொகுப்பாளினி அம்மு சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவில் முதன் முதலாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வந்தார். மேலும்  பைரவி சீரியலில்  நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இல்லத்தரசி களையும் கவர்ந்தார்.

ammu
ammu

அதன் பிறகு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார் தற்பொழுது இவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அம்மு பல தொலைக்காட்சி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இப்படி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் தலைகாட்டி வந்த அம்மு சமீபகாலமாக எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லை.

ammu
ammu

இருந்தாலும் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு நான் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அம்மு கிளாமரான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

ammu
ammu

Leave a Comment