ஹெல்மெட்டுக்குள் வெடித்த செல்போன்.! இளைஞர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?

0
vivo
vivo

இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு கிருஷ்ணகிரியில் சென்று கொண்டிருந்தபோது. போன் வந்தது அப்போது செல்போனை எடுத்து ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசினார் அப்போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது இதில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி புலி அரசு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆறுமுகம் 40வயது என்பவர் vivo செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென போன் வந்தது அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசினார்.

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிக் கொண்டு சென்று இருந்த இளைஞர் திடீரென அவரது ஹெல்மெட்டுக்குள் இருந்த மொபைல் வெடித்தது அப்பொழுது அவரின் காது, கண்ணம், கழுத்து என அனைத்தும் படுகாயம் அடைந்தது, பின்பு சாலையில் கீழே விழுந்தார், இதை நடந்து கொண்டு சென்றிருந்த மக்கள் கவனித்து உடனே  போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள் விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள், மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.