பிகில் டீசர் பற்றி பாடலாசிரியர் விவேக் ட்வீட்.!

0
bigil-trailer
bigil-trailer

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் பிகில் இதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இத்திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார்.

பிகில் திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள் ஏஜிஎஸ் நிறுவனம். பிகில் திரைப்படத்திலிருந்து இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது டீசர் எப்போது என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அதேபோல் டீசர் முதல் வாரத்தில் வெளியாகும் என அட்லீ இசை வெளியீட்டு விழாவில் கூறினார், ஆனால் இதுவரை படக்குழு எப்பொழுது டீசர் வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருக்கிறார்கள், அதேபோல் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் எதிர்பார்ப்பை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ரசிகர்கள் டீசர் எப்போது வரும், வருமா.? இல்லை வராதா? என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள், டீசர் பற்றி ட்விட்டரில் பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார் அதற்கு பாடலாசிரியர் விவேக் டீசர் நிச்சயம் வரும் அதைதான் தயாரிப்பாளரும் பேட்டியில் கூறியுள்ளாரே, எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு தீப்பொறி குறியீட்டை பதிவிட்டுள்ளார்.