விவேக் தலை சிறந்த காமெடி நடிகர் என்று விருது பெற்ற திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டங்களில் சரி அன்றைய காலகட்டங்களில் சரி காமெடி நடிகர் என்றால் அது ஒரு தனி சிறப்பு தான், அதிலும் விவேக் காமெடி என்றாலே அதில் கருத்தும் காமெடியும் தான் இருக்கும். அந்தவகையில் விவேக் தலை சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பெற்ற திரைப்படங்கள் என்று தற்போது நாம் பார்க்கலாம்.

உன்னருகில் நானிருந்தால் :- 1989 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் மீனா இணைந்து நடித்து ஒரு வெற்றி பெற்ற திரைப்படம் தான் உன் அருகில் நான் இருந்தாள். இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் தனது சிறந்த காமெடி நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரன் :-2002ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தைப் லிங்கசுவாமி அவர்கள் இயக்கியுள்ளார்.இப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன்  போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் அவர்களின் காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.

run

சாமி :- 2003 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சுவாமி இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் திரிஷா இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் ஐய்யர் வேடத்தில் படித்த ஒரு கலக்கு கலக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

saamy

பார்த்திபன் கனவு :- ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியாகி ஓரளவு வெற்றியை கொண்ட திரைப்படம் தான் பார்த்திபன் கனவை இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் தனது மாமனாரை தத்ரூபமாக குரங்கு மாதிரி வரையும் காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.

parthiban kanavu

பேரழகன் :- 2004 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரண்டு வேடத்தில் நடித்து அசத்திய திரைப்படம் தான் பேரழகன் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் அவர்கள் நடித்திருப்பார்.

அண்ணியன்:- விக்ரம் மற்றும் சுதா நடிப்பில் வெளியான அன்னியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில்  விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் இன்னும் சிலர் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க  குற்றங்கள் செய்தால் இந்தத் தண்டனை தான் என எடுத்துரைக்கும் திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் அப்பப்போ நடிகர் பிரகாஷ்ராஜ் கலாய்த்து இருப்பார்.

ஆதி :- நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம்தான் ஆதி இந்த திரைப்படத்தில் விவேக் ஒரு காலேஜ் ஸ்டூடன்ட் ஆக நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் விவேக்.

aathi

சிவாஜி :- ரஜினி மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றிக்கு என்ற திரைப்படம்தான் சிவாஜி இந்த படம் 2007 இல் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது மட்டுமல்லாமல் விவேக் அவர்கள் இந்த படத்தில் அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார்.

sivaji

குருவி:- விஜய் நடிப்பில் வெளியாகி ஓரளவு வெற்றி கண்ட திரைப்படம்தான் குருவி இந்த படம் 2020 இல் வெளியாகியது இந்த படத்தில் விஜய் அவர்கள் ரேஸ் ஓட்டும் போது விவேக் மரண காமெடி செய்திருப்பார். அது இன்று வரையிலும் ரசிகர்களால் மறக்கமுடியாத காமெடியாக இருந்து வருகிறது.

kuruvi

குரு என் ஆளு:- இந்த படத்தில் விவேக் அவர்கள் பெண் வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மேலும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு அருமையாக தனது காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சிங்கம்:- 2010 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படத்தில் சூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சிங்கம் இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் அதிலும் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற காமெடி அவ்வளவு சூப்பராக நடித்திருப்பார்.

படிக்காதவன்:- தனுஷ் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் படிக்காதவன் இந்த படத்தில் விவேக் அவர்கள் ஒரு தாதாவாக நடித்து அசத்தியிருப்பார்.

மாப்பிள்ளை:- தனுஷ் மற்றும் ஹன்சிகா மோட்வானி இவர்கள் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாப்பிள்ளை இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி நடித்திருப்பார்.

சிங்கம் 2 :-சூர்யா மற்றும் ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி இவர்கள் நடிப்பில் வெளியாகி ஓரளவு வெற்றி கண்ட திரைப்படம் தான் சிங்கம்-2 இந்த வேடத்திலும் விவேக் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சந்தானமும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையில்லா பட்டதாரி :- நடிகர் தனுஷ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி. இத்திரைப்படத்தில் ஒரு பிரைவேட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து தனது காமெடியை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் விவேக்.

velaiyilla pattathari

வெடி :- 2011 ஆம் ஆண்டு வெளியாகி ஓரளவு வெற்றி என்ற திரைப்படம்தான் வெடி இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் அவர்கள் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் ஒரு ஜிம் கோச்சராக நடித்து அசத்தியிருப்பார் அதிலும் அவர் அந்த பலூனை வைத்து அந்தரத்தில் பறக்கும் காமெடி இன்றுவரையிலும் ரசிகர்களால் பேசப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்படங்களில் விவேக் அவர்கள் நடித்து வெற்றி பெற்று தனது முத்திரையைப் பதித்துள்ளார் ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version