ரஜினி அஜித் மட்டுமே இதுபோல் துணிந்து நடிப்பவர்கள்.! பிரபல முன்னணி நடிகர் ஒரே போடு

தமிழ் திரை உலகில் கடின உழைப்பினால் உயர்ந்தவர்கள் ஒருசிலரே அவர்களில் மிக முக்கியமான பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் ஆகும்.

இவர்கள் இருவரும் இப்போழுது தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா அவர்கள் கடந்த சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் இப்படத்தை இயக்கி வருகிறார். அதே போல தல அஜித் அவர்கள் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.அவர்கள் இருவரும் கடின உழைப்பினால் வந்தவர்கள் என முன்னணி பிரபலங்கள் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் பேட்டிகளில் கூறியுள்ளதை நாம் கண்டுள்ளோம். முன்னணி காமெடி நடிகரான விவேக் அவர்கள் இருவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. சமீபத்தில் விவேக் அவர்கள் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

வெள்ளை பூக்கள் என்ற திரைப்படத்தில் விவேக் வயதான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுதான் உங்களுடைய உண்மையான தோற்றமா எனக் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த விவேக் இதுதான் என்னுடைய உண்மையான தோற்றம் என கூறினார். மேலும் அவர் திரையுலகில் இந்த மாதிரி துணிந்து நடிப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் அவர்கள் தான் என வெளிப்படையாக பேசியுள்ளார் விவேக்.

Leave a Comment