இறப்பதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் விவேக் என்ன கூறினார் தெரியுமா.!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் இவர் தமிழில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இந்த நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார் விவேக்கின் மறைவு சினிமா பிரபலங்களை தூக்கிவாரிப்போட்டது. எதிர்பாராத விவேக்கின் மரணம் செய்தியைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் விவேக்கின் மறைவிற்கு  பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வந்தார்கள்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்பொழுது சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்துள்ளார் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.

தனியார் மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதது ஏன்.? அரசு மருத்துவமனைக்கு வந்தது ஏன்.? என்ற கேள்வி விவேக்கிடம் வைக்கப்பட்டது அப்பொழுது விவேக் கூறியதாவது அரசு மருத்துவமனையில் தான் பெரும்பாலான மக்களும் ஏழை மக்களும் மருத்துவ சேவை செய்து வருகிறது தடுப்பூசி குறித்து பலருக்கு கேள்விகள் இருக்கின்றன அது தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை செலுத்திக் கொண்டேன் என கூறினார்.

மேலும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த வித ஆபத்தும் கிடையாது ஆனால் நமக்கு பாதுகாப்பு உண்டு என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அரசு மருத்துவமனையில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கரோன வந்தாலும் உயிரிழப்பு இருக்காது காப்பீடு எடுத்துக் கொண்டேன் என பைக்குக்கு விபத்து நேராது என கூற முடியுமா.? காப்பீடு எடுத்துக்கொண்டாலும் பைக்கை சரியாக ஓட்ட வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

என்னதான் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சமூக பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்க வேண்டும் எனவும் கூறினார் கடைசியாக ஊடகங்களுக்கு பேசும்பொழுது கூட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக அக்கறையுடன் பேசியது நெஞ்சை உறைய வைத்தது தற்பொழுது இதைப்பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி வருகிறார்கள்.

Leave a Comment