விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் ஒளிப்பதிவு செய்த காட்சி இதுதான். ! இதோ அதிகாரபூர்வ ஆதாரம்

0

2019ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது, படத்தில் அஜித் அன்பான அப்பாவாக பாசத்திற்காக ஏங்கும் அப்பாவாக நடித்து இருப்பார்.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இறுந்தார், கிராமத்து பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் பாதியில் பல காட்சிகள் ட்ரோன்  கேமரா மூலம் மேலிருந்து எடுக்கப்பட்டிருக்கும்.

அதுவும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் டைட்டில் வரும்போது அந்த காட்சிகள் அனைத்தும் மேலிருந்து தான் எடுக்கப்பட்டது. ட்ரோன் கேமரா மூலம் இந்த காட்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தவர் தல அஜித் தான்.

தல அஜித் ஒளிப்பதிவு செய்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது, ட்ரோன்  கேமராவை தல அஜித் கையாளும் புகைப்படமும் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த  புகைப்படங்கள்.