கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் “FIR” படத்தை மட்டும் தரமாட்டேன் ஒத்த காலில் நிற்கும் விஷ்ணு விஷால்.! விடாமல் துரத்தும் OTT தளங்கள்.

0
FIR
FIR

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக பயணித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் ஆரம்பத்தில் கிராமத்து கதைகளில் பெரிதும் விருப்பம் காட்டினார் அது அவருக்கு தொடர்ந்து நல்லதொரு வரவேற்பை பெற்று தந்த நிலையில் ஒரு சமயத்தில் கதையை மாற்றிக் கொண்டு தற்பொழுது ஆக்சன் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இதுவரை வெளியான வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் நடிப்பில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் வேட்டையும் அடித்து நொறுக்கிய படம் ராட்சசன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு  படவாய்ப்புகள் குவிந்தது ஆம் இவர் நடிப்பில் கடைசியாக காடன் என்ற திரைப்படம் வெளியாகியது.

அது பெருமளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதை தொடர்ந்து பல்வேறு சிறப்பான கதைகளை கேட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் முதலாவதாக எஃப்ஐஆர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை விஷ்ணுவிஷால் தயாரித்தும் நடித்தும் உள்ளார். அவருடன் கைகோர்த்து ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம்.

வெகு விரைவிலேயே திரையரங்கிற்கு வெளிவர இருக்கிறது இந்த படத்தில் தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம். எஃப் ஐ ஆர் படத்தை முதலில் OTT தளத்தில்தான் கைப்பற்ற முயற்சி எடுத்தது. அதற்காக படக்குழுவிடம் OTT தளங்கள் சுமார் 30 கோடி கையை கேட்டது ஆனால் விஷ்ணு விஷால் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது எப்ஐஆர் படம் ஹிந்தி டப்பிங் உரிமை மட்டுமே 8 கோடிக்கு விலைபோன உள்ளதாக கூறப்படுகிறது.