நடிகர் விஷ்ணு விஷால் கையில் குத்தி இருக்கும் டாட்டூவால் கடுப்பாகும் ரசிகர்கள்.! தெறிக்கும் கமெண்டுகள்

தமிழ் சினிமாவில் குடும்பங்களை கவரும் படியான கிராமத்து சாயலில் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு திரையுலகில் நல்லதொரு வரவேற்ப்பு ஆரம்பத்திலேயே இருந்து கிடைத்தது.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் அந்த படம் வசூல் ரீதியாக பெரிய வேட்டை நடத்தியது இதனால் விஷ்ணு விஷால் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். மார்க்கெட் அதிகரிந்து உள்ளது. ராட்சசன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தற்போது ஆர்வம் காட்டியுள்ளார்.

சினிமாவில் வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் 2011ம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் ஆரியன் என்ற ஒரு மகனும் இருக்கிறார் ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து நிலையில் சில ஆண்டுகள் கழித்து பேட்மிட்டன்  விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமிபத்தில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. அதை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இப்படி சிறப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் விஷ்ணு விஷால் தற்போது தனது கையில் டாட்டூவை குத்தி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது மகன் ஆரியன் , அவரது முன்னாள் மனைவி ரஜினி இரண்டாம் மனைவி ஜுவாலா ஆகியோரின் பெயரை குறித்து இருக்கும் டாட்டூவை பார்த்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த டாட்டூவை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment