Vishnu Vishal’s Mohan Doss : இயக்குனர் ராம் குமாரின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ராட்சசன், இந்த திரைப்படம் சிறுமிகளை தேடித் தேடி சென்று கொலை செய்யும் கில்லர் கதை களம் கொண்ட திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாகவும் அமலாபால் கதாநாயகியாக நடித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, ‘play boy magazine’ இரண்டு பிடிக்காத கான்டம்கள். மற்றுமொரு ரத்தம் படிந்த சுத்தியல் ஆகியவை இந்த போஸ்டரில் காணப்பட்டதால் இந்த திரைப்படமும் பெண்களின் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
As most of you voted a 'YES',
TITLE ANNOUNCEMENT TEASER of my next film will be out tomorrow evening at 04.07PM.Here's a little sneak peek into the world we are about to create ?️#VishnuVishalsNEXT pic.twitter.com/Vqm5ZvF54x
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 10, 2020
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் தலைப்பு வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த டீசரில் விஷ்ணு விஷால் காது வாய் ஆகியவற்ரை மூடிய குரங்குகளுக்கு பின்னால் சுத்தியை வைத்து ஒருவரை ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்கிறார்.
பிறகு அவர் அணிந்திருந்த ரத்தம் படிந்த சட்டையை கழட்டி வாஷிங்மெஷினில் போடுகிறார் அந்த நேரத்தில் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகிறது, திரைப்படத்திற்கு ‘மோகன்தாஸ்’ என பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இந்தத் திரைப்படத்தை களவு என்னும் திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் தான் இயக்கி வருகிறார்,.
டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ.