தனது புதிய காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய விஷ்ணு விஷால்.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படம் அவருக்கு வெற்றி திரைப் படமாக அமைந்ததால் தொடர்ந்து இவர் நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து பலே பாண்டியா, முண்டாசுபட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நடராஜ் என்பவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை Gutta Jwala என்பவரும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது, இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இவர்களின் காதலை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment