காதலியை கரம் பிடிக்க போகும் விஷ்ணு விஷால் பத்திரிக்கையை வெளியிட்டு பரபரப்பு.!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் தான் விஷ்ணு விஷால் இவரது திரைப்படங்கள் சமீபகாலமாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சனம் ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுத் தந்தது.

இவரது திருமண வாழ்க்கையில் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்குத் ஆர்யன் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இருவருக்கும் ஒரு சில காரணம் குறித்து கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனையடுத்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜீவாலா என்பவரை காதலித்து வருகிறார்.

ஜீவாலா பிறந்த நாளில் கூட விஷ்ணு விஷால் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை பரிமாற்றி கொண்டார்கள் இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று சொன்ன நிலையில் தற்போது தனது இரண்டாம் திருமணத்தின் தேதியை பத்திரிகையுடன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பத்திரிக்கை தற்போது விஷ்ணு விஷால் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment