விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! வெளியான புதிய தகவல்…

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக ராம்குமார் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாக இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து கமிட்டாகி வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் நடிக்க இருப்பதாக கூறும் தகவல் ஒரு வதந்தியான தகவல் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் தற்போது நடிகை அதிதி சங்கர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் மாவீரன் திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை அதிதி சங்கர்.

மேலும் விஷ்ணு விஷால் லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை மே மாதம் 1வது வாரத்திலிருந்து தொடங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஏனென்றால் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த் அவர்களும் கதாநாயகனாக நடித்து வருகிறாராம் மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment