வெளிவருவதற்கு முன்பாக பல கோடியை அள்ளிய விஷாலின் “வீரமே வாகை சூடும்” – சாட்டிலைட் ரைட்ஸ் உரிமம் எவ்வளவுக்கு விற்றது தெரியுமா.?

vishal
vishal

நடிகர் விஷால் சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் ஆக்ஷன் போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவரது படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள அவரும் எவ்வளவு கதைகளில் நடித்தாலும் அந்த கதைகள் எல்லாம் இவருக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது சொல்லப்போனால் அந்த படங்கள் அனைத்தும் படு தோல்வி.

இருந்தாலும் தனக்கான திறமை இருக்கிறது நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இப்போது இவர் கையில் இருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் து. பா. சரவணன் இயக்கியுள்ளார்.

வீரமே வாகை சூடும் திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹைதாரி அறிமுகமாகி நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் திரில்லர் கலந்த படமாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது. வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இந்த பெரிய படம் நிச்சயம் நடிகர் விஷாலுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் என அனைத்தும் மிரட்டும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாகவே விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படமும் பல கோடியை பார்த்து உள்ளது. ஜீ தமிழ் நிறுவனம் சுமார் 17 கோடிக்கு சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.